அமெரிக்காவுக்கு சரஸ்வதி சிலையை வழங்கிய இந்தோனேசியா!
இந்தோனேசியா நல்லெண்ண அடிப்படையில் அமெரிக்காவுக்கு 15 அடி உயரமுள்ள சரஸ்வதி தேவி சிலையை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. பாலி கலை நுணுக்குத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சரஸ்வதி தேவி சிலை வெண்ணிறத்தில் தங்க முலாம் பூசப்பட்டு எழிலுற காணப்படுகிறது. ஒரு கையில் ஜெப மாலையுடன் தாமரைப் பூவின் மீது அமர்ந்து சரஸ்வதி வீணை வாசிப்பது போல் தோன்றும் இந்த சிலை இரும்பினால் செய்யப்பட்டது.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தூரத்தில் மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகே சரஸ்வதி தேவியின் இந்த சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமாக இந்த சிலை இன்னும் திறந்து வைக்கப்படவில்லை.
எனினும், இப்போதே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சரஸ்வதி தேவியின் சிலையை கண்டு வியக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment