பெண்ணொருவரை கேட்டு நீதவானை அச்சுறுத்திய இராணுவ வீரர் கைது!
நீதவானை அச்சுறுத்திய இராணுவ வீரரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, புத்தளம் இராணுவ முகாமில் கடமையாற்றும் குறித்த இராணுவ வீரர், குருணாக்கல் மாவட்ட நீதவான் நிமல் ரணவீரவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, பெண்ணொருவரின் பெயரைக்கேட்டு, அந்த பெண் நீதவானின் வீட்டில் இருக்கின்றாரா என விசாரித்துள்ளார்.
அதற்கு அவ்வாறான பெயருடைய பெண் இந்த வீட்டில் இல்லையென்று நீதவான் தெரிவிக்கையில், குறித்த சந்தேகநபர் தகாத வார்த்தைகளால் நீதவானை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இராணுவ வீரர் ஐந்து தடவைகள் நீதவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளதுடன், அழைப்பை மேற்கொண்ட ஐந்து தடவையும், நீதவானை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்குற்றச்சாட்டிற்கிணங்க சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment