சிரிய அரசபடையினருக்கு எதிராக போராடும் போராளிகளுக்கு அமெரிக்கா உச்ச ஆதரவு! இரசாயன ஆயுதங்கள் வழங்கப்படுமாம்!
சிரியாவில் ஷியா பிரிவை சேர்ந்த ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக சன்னி மற்றும் கிறுஸ்தவ போராளிகள் போரிட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்துவரும் போரினால் அங்கு இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
அலெப்போ நகரை போராளிகளிடமிருந்து கைப்பற்ற அதிபர் படை தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. இதில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பொதுமக்கள் 150 பேரை அதிபர் படையினர் கொன்றுவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதனையடுத்து போராளிகளுக்கு முன்னறிவிப்பின்றி ஆயுதங்கள் வழங்கி உதவிட ஜனாதிபதி பராக் ஒபாமா முடிவு எடுத்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. சிரிய அரசபடையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது உறுதியாகியுள்ளதால் போராளிகளுக்கு அதுபோன்று இரசாயன ஆயுதங்கள் வழங்கப்படும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனான் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும், ஈரானும் சிரியாவிற்கு உதவுவதால், அமெரிக்கா இந்த மிரட்டலை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1 comments :
They do whatever they wish.
Post a Comment