யாழ் சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விட்டு களனியிலுள்ள.......!
யாழ் கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்து சென்று துஷ்பிர யோகத்திற்கு உட்படுத்தியதன் பின்னர், வீட்டுவேலைக்காக களனியிலுள்ள பெண்ணொருவரிடம் பிலியந்தலை பிர தேசத்திலுள்ள இளைஞர் ஒருவர் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுமி களனியில் வீடொன்றில் வேலைக்காரியாக இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி யாழ் கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து 21 மற்றும் 22 வயது பெண்களுடன் மே மாதம் 24 ஆம் திகதி தப்பியோடியுள்ளார். அவர்கள் மூவரும் கொழும்பை நோக்கி பஸ்ஸில் வந்துக்கொண்டிருந்தபோது, அதிலொரு யுவதி பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த ஆணொருவருடன் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார். அவரின் கோரிக்கைக்கு அமைய மூவரும் பிலியந்தலைக்கு சென்று ஹோட்டலில் தங்கியதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சிறுமியை மட்டும் அங்கிருந்த இளைஞரிடம் ஒப்படைத்த இரண்டு யுவதிகளும், அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியை சில நாட்கள் ஹோட்டலில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன், அதற்கு பின்னர் களனியிலுள்ள பெண்ணொருவரிடம் குறித்த சிறுமியை வீட்டுவேலைக்காக ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
15 வயதான குறித்த சிறுமி அந்த வீட்டில் வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு முன்னர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், வீட்டு உரிமையாளர் குறித்த சிறுமியிடம் தகவல்களை பெற்று, கிளிநொச்சியிலுள்ள சிறுமியின் தந்தைக்கு இதுதொடர்பில் அறிவித்துள்ளார். அதன் பின்னர் வீட்டு உரிமையாளர் குறித்த சிறுமியை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து சிறுமியுடன் தப்பியோடிய இரண்டு யுவதிகள் தொடர்பில் இதுவரையிலும் தகவல் எதுவும் இல்லை என தெரிவித்தார் பொலிஸார், சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேநபர் பிலியந்தலையை சேர்ந்த மேசன் எனவும் சந்தேகநபரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார், தெரிவித்தனர். .
0 comments :
Post a Comment