இளவரசர் ஹாரி என்னை காப்பாற்றிருக்காவிட்டால் நான் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன் - ஜேம்ஸ
10 ஆண்டு இராணுவ சேவைக்கு பின் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து இராணுவ வீரர் ஜேம்ஸ் வார்டன் தனது இராணுவ பணியில் ஏற்பட்ட அனுபவம் குறித்து "கால்டு அவுட் இன் தி ஆர்மி" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
அப்புத்தகத்தில் தனது அனுபவத்தை தெரிவிக்கையில், நான் ஆப்கானிஸ்தானில் பாஸ்டியன் முகாமில் தங்கியிருந்தேன் அப்போது எங்களுடன் இளவரசர் ஹாரியும் இருந்தார். இந்த நிலையில் ஓரின சேர்க்கையாளனாகிய என் மீது சில இராணுவ வீரர்கள் கடும் வெறுப்பில் இருந்தனர். சம்பவத்தன்று, 6 வீரர்கள் சேர்ந்து என்னை அடித்து உதைத்து கொலை செய்ய முயன்றனர்.
இதை பார்த்த இளவரசர் ஹாரி என்னை அவர்களிடம் இருந்து மன உறுதியுடன் காப்பாற்றினார். மேலும், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, என்னை தொடர்ந்து மிரட்டினாலோ ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அன்று இளவரசர் ஹாரி என்னை காப்பாற்றி இருக்காவிட்டால் நான் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன் அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இளவரசர் ஹாரியின் இந்த நடவடிக்கையை போஸ்னியாவில் முகாமிட்டிருக்கும் இராணுவ தளபதி உட்பட இங்கிலாந்து இராணுவ அதிகாரிகளும் பாராட்டியுள்ளனர்.
0 comments :
Post a Comment