ஆரோக்கியமான குழந்தை உங்களுக்கு வேண்டுமா?
ஒரு பெண் முழுமை பெறுவது தாயானப் பின் தான். உங்களுக்குள் ஒரு உயிர் வாழும் போது அதில் கிடைக்கும் ஆனந்தத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் கர்ப்பக்காலம் மிகவும் சந்தோஷமாகவும் மறக்க முடியாதவையாகவும் இருக்கும்.
மேலும் பிறக்க போகும் தன் குழந்தை சிறந்த குழந்தையாக விளங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். ஏனெனில் சிறிய தவறு கூட, கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும். எனவே பிறக்கப்போகும் குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு பிறக்க சில சிறந்த வழிகளைக் பார்க்கலாம்.
• குழந்தையின் சந்தோஷம், தாயின் சந்தோஷத்தோடு நேரடி தொடர்பில் உள்ளது. அதனால் எப்பொழுதும் தாயானவள் சந்தோஷமாக இருந்தால், கருவில் இருக்கும் குழந்தை வளத்தோடு இருக்கும்.
• மன அழுத்தம் குழந்தைக்கு நல்லதல்ல. தாய்க்கு மன அழுத்தம் ஏற்பட்டால், கருவில் இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கும். அதனால் நன்றாக ஓய்வெடுத்து மன அழுத்தம் தரும் விஷயங்களிடம் இருந்து தள்ளி இருக்கவும்.
• மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து சத்துள்ள உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அது குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
• கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புகள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.
• தண்ணீர் முக்கியமான மற்றொரு ஊட்டச்சத்து. அதனுடைய முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆகவே அடிக்கடி தண்ணீர் குடித்து நீர்ச்சத்தோடு இருக்கவும்.
• கர்ப்ப காலத்தில் பல மருந்துகள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனால் நீங்களாகவே எந்த மருந்தையும் சாப்பிடக்கூடாது. எப்போதும் ஒரு மருந்தை உட்கொள்வதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.
• நடை போன்ற மெல்லிய உடற்பயிற்சி, குழந்தைக்கு நன்மையை விளைவிக்கும். ஆனால் உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.
0 comments :
Post a Comment