நாட்டில் மீண்டும் இரத்த வெள்ளத்தைப் பார்க்க முயல்கிறது ஹெல உறுமய!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முப்பது வருட யுத்த்த்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டுக்குப் பெற்றுத்தந்த சுதந்திரத்தையும் சமாதானத்தையும் அழித்தொழித்து இனவாத்த்தையும், மதவாத்த்தையும் மீண்டும் கிளறி இந்நாட்டில் மீண்டும் இரத்த வெள்ளம் பாய்ந்தோடச் செய்யவே சிங்கள உறுமய மற்றும் ஜாத்திக ஹெல உறுமய முயல்கிறது என தென்மாகாண சபையின் சமூகசேவைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யூ.ஜீ.டீ. ஆரியத்திலக்க குறிப்பிடுகிறார்.
ஹக்மீமன தொடகொட பஞ்சதூபாராம விகாரையில் இடம்பெற்ற கூட்டமொன்றிற்குச் சமுகமளித்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்:
மாகாண சபையை வெள்ளை யானையாக மாற்ற முடியாது என்று ஹெல உறுமயவும் விமல் வீரவன்சவும் குறிப்பிடுகின்றனர். ஆயினும், இந்நாட்டு மக்களின் பில்லியன் கணக்கான பணத்தை அழித்தொழிக்கின்ற மக்களை துன்பியலுக்குள் சிக்க வைக்கின்ற நிறுவனங்கள் பற்றி இவர்கள் வாய் திறக்காமலிருப்பது அதிசயமாகும்.
நாங்கள் மாகாண சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் நாங்கள் பிச்சை வாங்கி வயிறு வளர்த்து அரசியலுக்குள் வந்தவர்கள் அல்ல. இலங்கையிலுள்ள 8 மாகாண சபைகளிலும் 11 விடயங்கள் உள்ள ஒரே அமைச்சர் நான்மட்டும்தான்! இந்தப் 11 வது விடயத்திலிருந்து மக்களுக்குச் சேவை செய்வதற்காக மாகாண சபையென்ற இந்த வெள்ளை யானையினால் தான் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இந்நாட்டு மக்கள் அதிக நம்பிக்கை வைக்காதவர்களாக அரசியல்வாதிகளே இருக்கின்றனர்.
சிற்சில அரசியலாளர்கள் செய்கின்ற வேலைகள்தான் இதற்குக் காரணம். இந்நிலை வருவதற்கு காரணமாக அமைந்த அரசியலாளர்களே இதற்குப் பொறுப்புச் செல்ல வேண்டும். இந்நாட்டு மக்களின் எண்ணங்களைக் குழப்புகின்ற தன்மையை மிக விரைவில் இல்லாமற் செய்ய வேண்டும். மீண்டும் எங்கள் நாட்டுக்குத் தேவையானது யுத்தமல்ல. கடின உழைப்பினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சுதந்திரத்தை சமாதானத்தை பாதுகாக்கக்கூடிய அனைத்து இனங்களையும் மதிக்கக்கூடிய சமுதாயத்தை நிர்மாணிப்பதே!
முப்பது வருட யுத்தத்தினால் உயிரிழந்த வலது குறைந்திருக்கின்றவர்களில் 99 வீதமானவர்கள் இந்நாட்டுச் சிங்கள பௌத்தர்கள். அதனால் இன்றும் அந்த வீடுகளில் சந்தோசம் என்பதில்லை. இனவாதத்தையும் மதவாதத்தையும் கிளறி இந்நாட்டை மீண்டும் யுத்தத்திற்குட்படுத்தினால் அதிலிருந்து பெரும் பாதிப்பைப் பெறுவது இந்நாட்டு அப்பாவிப் பொதுமக்களின் பிள்ளைகளே. பெரிதாகக் குரைக்கின்ற தலைவர்களின் பிள்ளைகளை யுத்தத்திற்கு அனுப்புவதில்லை. எதற்காகவும் இந்நாடு எக்காரணத்திற்காகவும் ஒருவரை ஒருவர் கொன்று இரத்த ஆறாகா மாற்றுவதற்கு இடமளிக்கவே கூடாது’
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment