Wednesday, June 26, 2013

வாஸ் குணவர்தனவின், பாதுகாப்பிற்கான வழங்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும், அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்க!

D.I.G யின் மனைவி சாட்சியாளர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி அழுத்தங்களை பிரயோ கித்தார்! - இரகசிய பொலிஸார்!

கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாமின் படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவை, தொடர்ந்தும் எதிர்வரும் 9 ம் திகதி வரை வாஸ்விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை தொடர்பாக விசாரிப்பதற்கு அவரது மனைவிக்கு எதிர்வரும் 9 ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, மஜிஸ்திரேட் நீதிமன்றம், அழைப்பாணை பிறப்பித்ததுள்ளது

குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விளக்கமளித்த இரகசிய பொலிஸார், சந்தேக நபரான பிரதி பொலிஸ்மா அதிபரின் மனைவி, வழக்கின் சாட்சியாளர்களது உறவினர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி, பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்துள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளது எனவும் இவ்வாறு சுமார் 25 தொலைபேசி அழைப்புகள், ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அறிக்கை கிடைத்துள்ளதாகவும், இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரகசிய பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேலதிக நீதவான் மொஹமட் சஹாப்தீன், சந்தேக நபரான வாஸ் குணவர்தனவின், பாதுகாப்பிற்கான வழங்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகளையும், அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைத்து, அறிக்கையொன்றை பெற்றுத்தருமாறும், உத்தரவிட்டார். படுகொலைக்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்திலிருந்து பெறப்பட்ட இரத்தக் கறைகள் தொடர்பாக, டி.என்.ஏ. விசாரணை நடாத்த, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com