அரசியல் வாதியாக இருந்தால் எதையும் செய்யலாமா???. வடமேல் மாகாண சபை உறுப்பினரின் கற்பனை சுக்குநூறாகியது!
தான் ஒரு அரசியல் வாதியாக உள்ளதால் நினைத்த எதையும் செய்யலாம் என்று எண்ணிய, வடமேல் மாகாண சபை உறுப்பினர் சரத்குமாரவின் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மகிந்த ராஜபக்ஸ. ஆசிரியை ஒருவர் முழங்காலில் நிறுத்திய சம்பவத்துடன் குற்றம்சாட்டப்பட்ட வடமேல் மாகாண சபை உறுப்பினர் சரத்குமாரவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கிவிடுவதென்றும்,இனிமேல் அவருக்கு கட்சியின் சார்பில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வேட்புமனு கொடுக்கப்பட மாட்டாதென்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்ததன் மூலம் சரத்குமாரவின் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவத்தை நேரில் கண்டதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்த ஒருவர் அந்த வாக்குமூலத்தை வாபஸ் பெறறுள்ளார் என தெரிவித்து சந்தேகநபரான மாகாண சபை உறுப்பினருக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் பொலிஸார் அதற்கு தமது ஆட்சேபனையை வெளியிட்டதை தொடர்ந்து, சந்தேக நபருக்கு நீதவான் பிணை வழங்க மறுத்ததுடன், அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன் குறித்த வாக்குமூலம் வாபஸ் பெறப்பட்டமை ஏதேனும் அழுத்தத்தின் பேரில் இடம்பெற்றிருக்கலாம் என சுட்டிக்காட்டிய நீதிபதி, பாடசாலையின் உபஅதிபர் ஏன் முறைப்பாட்டை வாபஸ் பெற்றார்? அவருக்கு அரசியல் அழுத் தங்கள் வந்தனவா போன்ற விடயங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டுமென்றும், அத்தகைய அழுத்தங்கள் தொடர்பில் சாட்சியாளர் கட்டளை சட்டத்திற்கு அமைய மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார். இதன் மூலம சட்டம் சகலருக்கும் சமனானது என்பதை நீதிமன்றம் நிருபித்துள்ளது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியையுடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடியுள்ளதுடன், குறித்த ஆசிரியை எதிர்கொண்ட பிரச்சினை தொடர்பில் நீதியை பெற்றுத்தருவதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஆசிரியை ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி பாடசாலைக்கு அணிந்துவந்த சீருடை கட்டையாக இருந்தனால் அம்மாணவியை எச்சரித்துள்ளார். ஆசிரியை எச்சரித்த விடயத்தை தனது அம்மாணவி தந்தையிடம் தெரிவித்ததையடுத்து, பாடசாலைக்குச் சென்ற வடமேல் மாகாண சபை உறுப்பினர் குறித்த ஆசிரியயை ஏசி, எச்சரித்து பின்னர் முழங்காலில் வைத்ததானது தனது தலையில் தானே மண்ணை அள்ளி வைத்ததற்கு ஒப்பானதாகும்.
(பி.கா)
3 comments :
Hope our Hon.President would take severe disciplinary action against that criminal also expect the legal system too would give him the correct punishment for him to learn a good lesson in his life.Let it be a good lesson for other swollen headed politicians
இப்படி அட்டகாசம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களை முதலில் இனம் காண வேண்டும்.
மலையக தமிழ் பா.உ கூட இதற்கு விதிவிலக்கல்ல.கௌரவ ஜனாதிபதிக்கு இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் தெரிந்தால் இவர்கள் அரசியல் வாழ்க்கைக்கு சங்குதான்.....
First of all politicians need politeness,because they do represent the citzens.As the above said some Hill country tamil politicians regrettably FOUL MOUTHED.indescent comments just flow through their mouths.It is better our Hon president
need to have an eye on these guys.
Post a Comment