நாச்சியாதீவு பர்வீனின் ‘மனவெளியின் பிரதி’ நூல் வெளியீடு (அழைப்பிதழ் இணைப்பு)
எழுத்தாளரும் கவிஞருமான நாச்சியாதீவு பர்வீன் எழுதியுள்ள ‘மனவெளியின் பிரதி’ நூல் வெளியீடும், மும்மொழிப் பாண்டித்தியம் மிக்கவும் பன்னூலாசிரியரும் பிரபல கவிஞரும் நாவலாசிரியருமான அமரர் எம்.எச்.எம். ஷம்ஸ் நினைவுரையும் எதிர்வரும் சனிக்கிழமை (15) கொழும்புத் தமிழ்ச் சங்கவிநோதன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பன்னூலாசிரியரும் திக்குவல்லைக் கமால் தலைமைதாங்கவுள்ள இந்நிகழ்வில், ‘சம்ஸ் எனும் ஆளுமை ‘ எனும் தலைப்பில் மெய்யியல் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் உரை நிகழ்த்தவுள்ளார்.
எழுத்தாளர் எம்.சி. றஸ்மின் ‘நாச்சியாதீவு பர்வீனின் கவிதைப்போக்கு’ எனும் தலைப்பிலும், இலங்கை மன்றக் கல்லூரியின் விரிவுரையாளர் விஜிதா சிவபாலன் ‘நாச்சியாதீவு பர்வீனின் கவிதையில் உள்ள சமூகப் பார்வை’ எனும் தலைப்பிலும், வதிரி சி. ரவீந்திரன் ‘நாச்சியாதீவு பர்வீனின் கவிதைகள் எனது பார்வையில்’ எனும் தலைப்பிலும் கருத்துரைக்கவுள்ளனர்.
மேல் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.ஏ. கபூர் பிரதம அதிதியாகவும். உயர் நீதிமன்ற சட்டத்தரணி என்.எம். சஹீத் சிறப்பதியாகவும் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வில் எழுத்தாளர் மேம்மன் கவி நூலறிமுகம் செய்யவுள்ளார்.
‘மனவெளியின் பிரதி’ யின் முதற்பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக்கொள்ளவுள்ள இந்நிகழ்வின் நிகழ்ச்சித் தொகுப்பையும் வரவேற்றுபுரையையும் எம்.சி நஜிமுதீன் செய்யவுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment