Saturday, June 15, 2013

பொதுநலவாய மாநாட்டின் மூலம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்குள் வருகின்றதாம்!

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய வர்த்தக மாநாட்டின் மூலம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாகவும், இது எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாகுமெனவும், பொதுநலவாய வர்த்தக அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பீட்டர் கலஹான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இதுவரை 75 நாடுகள் தமது பங்களிப்பை உறுதிபடுத்தியிருப்பதுடன், ஆயிரத்திற்கும் அதிகமான வர்த்தக பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், சுற்றுலாத்துறை கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், விளையாட்டு, உட்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும், பீட்டர் கலஹான் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 12ம் திகதி முதல் 14ம் திகதி வரை கொழும்பு சின்னமன் க்ரேன் ஹோட்டலில் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாடு இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com