"செக்ஸ்" குற்றச்சாட்டுக்கு உள்ளான இத்தாலியின் முன்னாள் பிரதமருக்கு 7 ஆண்டுகள் சிறை!
76 வயதுடைய இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 2010–ம் ஆண்டில் இரவு விடுதியில் நடனமாடும் 17 வயது மைனர் பெண்ணுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாகவும், ஒரு முறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அந்த பெண்ணை பொலீஸ் காவலில் இருந்து மீட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
பின்னர் இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெர்லுஸ்கோனிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்ததோடு, அவர் அரசு பதவி வகிக்கவும் தடை விதித்துள்ளார்கள்.
மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அவருக்கு நீதிபதிகள் அனுமதி அளித்து உள்ளனர். இத்தாலியில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறையில் குறைந்த காலம் தண்டனை அனுபவிக்க அந்த நாட்டு சட்டம் வகை செய்கிறது. அதன்படி பெர்லுஸ்கோனி மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் அவருக்கான தண்டனை மிகவும் குறைக்கப்படும் என்று கருதப்படுகிறது.
0 comments :
Post a Comment