ரீ- 56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது! மற்றொருவர் தப்பியோட்டம்! - வாழைச்சேனையில் சம்பவம்.
வாழைச்சேனை காவத்தமுனை மணிக்கூட்டுச் சந்தியில் வைத்து ரீ- 56 ரக துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை வீதியைச் சேர்ந்த தேவமணி பாக்கியம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவருடன் வந்த சீலன் என்பவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இன்று அதிகாலை ஓட்டமாவடி பாலத்திற்கருகில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை சோதனை செய்வதற்காக சைக்கிளை நிறுத்துமாறு கூறியபோது, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அவர்களை துரத்திச் சென்ற பொலிஸார், காவத்தமுனை மணிக்கூட்டுச் சந்தியில் வைத்து கைதுசெய்து சோதனையிட்ட போது, அறுகம்புல்லினால் மறைத்து வைத்து ரீ–56 ரக துப்பாக்கியை அவர்கள் கொண்டு வந்தது தெரியவந்தது
இதனையடுத்து அவர்களை கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment