சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினம் இன்று! இதுவரை இலங்கையில் 25000ற்கு மேற்பட்டோருக்கு புனர்வாழ்வளிப்பு!
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு பாடசாலை மாணவர்களையும், பொதுமக்களையும், அறிவுறுத்து வதற்கான பாதயாத்திரை ஒன்றை நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு தேசிய சபையின் தலைவி திருமதி லேஷா டீ சில்வா சந்திரசேன தெரிவித்தார்.
இப்பாத யாத்திரை இன்று காலை 9 மணிக்கு மருதானை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் ஆரம்பமாகி, ஹைட்பார்க் வரை இடம்பெறும் எனவும், இதனைத்தொடர்ந்து போதை பொருள் தொடர்பாக அறிவுறுத்தும் கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், திருமதி லேஷா டீ சில்வா சந்திரசேன தெரிவித்தார்.
மேலும் 25 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு தேசிய சபையினால் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய நிறுவனம் என்ற வகையில் போதை பொருள் கட்டுப்பாட்டை மாத்திரமன்றி, நிவாரண நடவடிக்கைகளையும், புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர், சமூக மயப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது எனவும், போதை பொருளுக்கு அடிமைப்பட்டவர்களை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி கொள்வது இன்றியமையாததாகும் எனவும், இந்த சர்வதேச போதை பொருள் எதிரப்பு தினத்தையொட்டி, பாடசாலை மாணவர்களை மாத்திரமன்றி பொதுமக்களையும் அறிவுறுத்த திட்டமிட்டுள்ளோம் என, அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு தேசிய சபையின் தலைவி திருமதி லேஷா டீ சில்வா சந்திரசேன தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment