மட்டக்களப்பிலிருந்து வவுனியா, குருநாகல், வென்னப்புவ, களுவாஞ்சிக்குடி பிரதேசங்களை சேர்ந்த 23 பேர் கைது!
மட்டக்களப்பிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா விற்கு செல்ல முயற்சித்த 23 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிபாளயம் கடற்கரை யிலிருந்து இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
குருக்கள்மடம் இராணுவ முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், அப்பகுதிக்குச் சென்ற இராணுவத்தினரும், பொலிஸாரும் இவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் 9 சிங்களவர்களும், 14 தமிழர்களும் அடங்குகின்றனர். 5 வயதிற்குட்பட்ட 5 குழந்தைகளும், இதில் அடங்குவதாக, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச். சுஜத் பிரியந்த தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்கள் பெண்கள் என தெரிவித்த பொலிஸார், இவர்கள், வவுனியா, குருநாகல், வென்னப்புவ, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என, பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து அரிசி, சீனி, சோயா மீட் உட்பட பெரும்பாலான உணவு பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாவும், பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment