Friday, June 28, 2013

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த இரண்டு உறுப்பினர்கள் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்!- மு.கா.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வட மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

புத்தளத்தை சேர்ந்த எஹியா ஆப்தீன் மற்றும் குருநாகலை சேர்ந்த றிஸ்வி ஜவகர்ஷா ஆகிய இரண்டு உறுப்பினர்களே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 13ஆவது திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவதற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பிலான பிரேரணை வட மேல் மாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சமாபிக்கப்பட்ட பிரேரணை ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் குறித்த இரண்டு உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். இதனையடுத்தே இவர்களை உடனடியாக கட்சியிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்' என நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி தெரிவித்தார். இந்த இடைநிறுத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அவர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com