Tuesday, June 11, 2013

13ல் மேற்கொள்ள வேண்டிய ஐந்து மாற்றங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாம்!

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய ஐந்து மாற்றங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணசபை அமைக்கப்படும் முன்னர் யாப்பிற்கு இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசியமானவை என ஜாதிக ஹெல உறுமைய முன்வைத்த 5 விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர்களினால் 13ம் திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் நேற்று மாலை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதாகவும், இந்த ஐந்து மாற்றங்களில் இரண்டு அமைச்சரவையில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனைய மூன்று மாற்றங்களும் உடனடியாக பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு முன்வைப்பதாக ஜாதிக ஹெல உறுமய தலைவர்களிடம் ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும், அரசியல் அமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்களிப்பு இடம்பெறும் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமது மனசாட்சிக்கு அமைய செயற்பட வாய்ப்பளிக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com