ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடி சென்றவர்களின் படகு விபத்துக்குள்ளானது - 13 பேர் பலி
சிட்னி: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைய சென்றவர்களின் படகு விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். படகு மூழ்கியதால் மாயமாகி விட்ட கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறினர். இந்தோனீசியா வழியாக ஆஸ் திரேலியாவிற்குள் கள்ளத்தனமாக குடியேற கிட்டத்தட்ட 60க்கும் அதிகமானோர் படகு மூலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப் பட்டது.
அப்படி அவர்கள் சென்ற படகு கடந்த வெள்ளிக்கிழமை கிறுஸ்துமஸ் தீவிலிருந்து 65வது கடல் மைலில் விபத்துக்குள்ளா னது. இதுவரை மீட்புப் பணிகள் மூலம் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உள் துறை அமைச்சர் ஜேசன் கிளார் கூறியுள்ளார். இது தவிர கடலில் மூழ்கிய மற்றவர்களைத் தேட 15 படகுகள், 10 விமானங்கள் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சொன்னார். படகு விபத்தில் சிக்கி கடலில் மிதந்த உடல்களை விபத்து நடந்த மறு நாள் மதியம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட விமானம் கண்டுபிடித்தது. அதன்பிறகு 9 பேரின் உடல்கள் மட்டும் அங்கிருந்து வெளியே எடுக்கப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்தது.
0 comments :
Post a Comment