இலங்கை முஸ்லிம்களை இந்தியாவில் இழிந்துரைத்தாராம் அஸாத் ஸாலி!
அஸாத் ஸாலி சென்னைக்குச் சென்று, இலங்கை தொடர்பாக கருத்துரைக்கும்போது இலங்கை முஸ்லிம்களை இழிந்துரைத்திருக்கிறார் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல குறிப்பிட்டுள்ளார்.
'இலங்கையிலுள்ள எந்தவொரு முஸ்லிமும் பிறநாட்டுக்குச்சென்று இலங்கையைக் காட்டிக் கொடுக்குமாறோ அல்லது இழிந்துரைக்குமாறு ஒருநாளும் குறிப்பிடவில்லை. இந்நாட்டு முஸ்லிம்கள் நாட்டின்மீதுள்ள அளவற்ற பற்றை அழித்தொழிப்பதற்காக அஸாத் ஸாலி செயற்பட்டதன் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் எனவும், வேறு எந்தவொரு அரசியல் தொடர்பான விடயங்களுக்கும் அவர் கைது செய்யப்படவில்லை எனவும் ஹுலுகல்ல குறிப்பிட்டுள்ளார்.
'அதேபோல இந்நாட்டிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு தருகிறார்கள். இன்று முஸ்லிம்களுடன் கூட்டுச்சேர்ந்தே கிழக்கு மாகாணசபையை உருவாக்கியிருக்கிறோம். அதேபோல, ஜெனீவா வாக்கெடுப்பின்போது முஸ்லிம் நாடுகள் இலங்கைக்காக வாக்களித்தன. இவ்வாறான காலகட்டத்தில் முஸ்லிம்களை திசைதிருப்புவது சிறந்ததல்ல' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment