மலேசியாவில் மர்மமாக இறந்த தமிழர்!
மலேசியாவின் கேதா மாகாணம், தாமன் சேதியா ஜெயா என்னுமிடத்தில் வசித்து வந்தவர் எம். நாகேந்திரன் (30)என்ற தமிழர் மர்மமான் முறையில் இறந்துள்ளார். இவர் கடன் தொகை செலுத்தப்படாத கார்களை, வங்கிகள் சார்பில் பறிமுதல் செய்யும் வேலை செய்து வந்தார்.
நேற்று அவர் வசித்து வந்த 5-வது மாடியில், வீட்டிற்கு வெளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் 3 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது.
இதைக்கண்ட பக்கத்து வீட்டுக்காரர், பொலிஸாருக்கு புகார் தெரிவித்துள்ளார். அதிகாலை பொலிஸ் வந்து செய்தியை சொன்ன பிறகே, அவரது மனைவி பரமேஸ்வரிக்கு இது தெரிய வந்தது. அவருக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர்.
தொழில் போட்டி காரணமாக நாகேந்திரன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணத்திற்காக நடந்துள்ளதா? என்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments :
Post a Comment