ஆயிரக்கணக்கானவரை கவர்ந்த யாழ் “வெசாக்“
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் யாழ் நகரில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் வலயத்தை நேற்று (24.05.2013) வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணிக்கு வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துறுசிங்க, யாழ் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், இராணுவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வெசாக் தோரணங்கள் யாவும் புத்த பெமானுடைய வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஓவியங்களும், அலங்கார வளையங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன்,தற்போது யாழ்மாவட்டத்தில் நடைபெறும் உயிரிழப்புகளை சித்தரிக்கின்ற வகையிலான காட்சிப்படுத்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இந்து மதத்துடன் பௌத்தம் ஒன்றாகியது என்பதை விளக்கும் முகமாக புத்தருடைய கதைகளை சித்தரிக்கும் ஒருபகுதியல் இந்து தெய்வங்களின் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment