எயார் அரேபியா, ஸாஜா - மத்தளைப் பயணத்தை நிறுத்துகிறது....!
ஸாஜாவிலிருந்து மத்தளை/ஹம்பந்தோட்டை வரை சேவையிலீடுபடுத்தப்பட்ட எயார் அரேபியா தன் சேவையை நிறுத்தியுள்ளது.
ஸாஜாவிலிருந்து மத்தளைக்கு வாரத்திற்கு இருமுறை தன் சேவையை எயார் அரேபியா ஆற்றியிருந்தது என 'எயார்லைன் ரூட் இணையத்தளம்' குறிப்பிடுகிறது. மத்தளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்திற்கு வாரத்திற்கு இருமுறை சேவை வழங்கிய எயார் அரேபியா ஆறு வாரங்களின் பின்னர் முற்று முழுதாகத் தன்சேவையை நிறுத்தியிருக்கிறது.
அது தன் சேவையைக் கீழ்க்கண்டவாறு மேற்கொண்டிருந்தது.
G9508 SHJ2130 – 0350+1HRI 320 47
G9509 HRI0430 – 0740SHJ 320 15
இதுவரை எயார் அரேபியா இணையத்தளத்தில் ஆசனங்களைப் பதிவு செய்வதற்கான ஒரு பக்கம் இருந்தது என்றாலும், தற்போது அப்பக்கம் இல்லாமற் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
0 comments :
Post a Comment