வெள்ளத்தில் மூழ்கியது நீர்கொழும்பு!
நீர்கொழும்பு நகரில் இன்று(06.052013) திங்கட்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்கொழும்பு நகரின் பல பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
நீர்கொழும்பு தளுபத்தை பிரதேசத்தின் பல்லன் சேனை வீதி, கட்டவ பிரதேசம், நகரமத்தியில் தம்மிட்ட வீதி மற்றும் போலவலான பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளன.
சட்ட விரோத கட்டிடங்கள் காரணமாகவும், பிரதான வடிகான் துப்பரவு செய்யப்படாததன் காரணமாக வடிகானில் நீர் நிறைந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது போன்று அடிக்கடி ஏற்படுவதாகவும் தளுபத்ததை பிரதேசவாசிகள் குற்றம் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக இன்று பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான மாணவர்களுக்கு ஏற்பட்டது. அத்துடன் தளுபத்தை பிரதேசத்தின் ஒருபகுதியிலிருந்து மறுபகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
நீர்கொழும்பு மாநகர சபை இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
0 comments :
Post a Comment