வட மாகாண தேர்தலுக்கு முன்னர் தேர்தல் சட்டமூலத்தில் திருத்தம்!
வட மாகாணத் தேர்தலை நடாத்துவதற்கு முன்னர் அந்த மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் பெயர்களை வட மாகாண வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்காக தேர்தல் சட்ட மூலத்துக்கு திருத்தமொன்றை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை அமைச்சர்களான சம்பிகரணவகவும் ரிஷாத் பதியூதீனும் ஆரம்பித்துள்ளனர். இந்த திருத்தத்தின் முக்கியத்துவத்தை இந்த இரு அமைச்சர்களும் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் விளக்கினர். சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை வடமாகாணத் தேர்தல்களுக்கு முன்னர் வடக்கிலிருந்து வெளியேற்றிய மக்களை மீள் குடியமர்த்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment