சுவிஸிலிருந்து இலங்கைக்கு விடுமுறையில் வந்த 16 வயது யுவதிக்கு நிரந்தர விடுமுறை கொடுத்த காரோட்டி.
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற விபத்தொன்றில் 29 வயதுடைய வாரணி பாலசூரியன் என்ற இளம்பெண் ஸ்தலத்திலேயே பலியாகியதுடன் கடுமையான காயங்களுக்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 16 வயதுடைய ஜனனி ஜவீன் என்ற இளம் யுவதி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். காயமடைந்து வைத்தியசாலையில் அவருடன் அனுமதிக்கப்பட்ட 11 வயதுடைய ஜனன் ஜவீன் என்ற அவரது சகோதரன் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சுவிட்சர்லாந்திலிருந்து விடுமுறையில் வந்திருந்த இவர்கள் மீது மதுபோதையில் காரைச் செலுத்திவந்த ஒருவன் மோதிவிட்டு தப்பியோடியுள்ளான். இவன் தப்பிஓடும் வழியில் மேலும் ஒரு மோட்டார் சைக்கிள் செலுத்தியை அடித்து விட்டு ஓடியபோது அப்பிரதேசத்தில் நின்றவர்களால் பின்தொடரப்பட்டு கொழும்பு தும்முல்ல சந்திக்கு சற்று அப்பால் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இலங்கையின் வடபகுதியை பூர்வீகமாகக்கொண்டு ஜெயந்திமாலா – ஜவீன் தம்பதிகளின் இரு குழந்தைகளும் சுவிட்சர்லாந்தில் கல்வியிலும் - கலையிலும் மிகச்சிறந்து விளங்கியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் இவர்கள் அலங்கரிக்காத கலை-கலாச்சார மேடைகள் மிக அரிது என்றே கூறப்படுகின்றது.
16 வயது ஜனனி தகவல் தொழில்நுட்பத்துறையில் தொழிற்பயிற்சியை ஆரம்பித்து சுமார் ஆறு மாதங்களே.
1 comments :
குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அதே நேரத்தில் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துதல் சட்டப்படி குற்றம். இலங்கையில் இச்சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். கடவையிலில் அருகில் வாகனம் நிறுத்துவதும் கூடாது. 5 மீற்றர் இடைவெளிவிட்டே நிறுத்த வேண்டும். சாரதி அனுமதிப்பத்திரம் பெற முன்னர் அவர்களுக்கு தத்துவங்கள் (theory), சட்டதிட்டங்கள் கடுமையான அமுல்ப்படுத்தி படிக்க வைக்க வேண்டும்.
அரசாங்கம் வீதியை புனரமைப்புச் செய்யும் அதேநேரத்தில், வாகனச் சட்டதிட்டங்களையும் கடுமையாக அமுல்ப்படுத்த வேண்டும். VS.DRAMMEN
Post a Comment