அமெரிக்காவுக்கு பலத்த எதிர்ப்பைக் காட்டுகிறது யெமன்
வொஷிங்டனின் இரகசிய உளவு விமானம் தொடர்பில் யெமன் மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக கிளர்ந்துள்ளனர். இதன் மூலம் அல்கைதா இயக்கம் சந்தோசப்படுகிறது. இந்த உளவு விமானக் கதையை மேலும் சோடித்து அல்கைதா இயக்கம், தமது இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்துவருகின்றது என வோஷிங்டன் செனட் சபைக்கு சாட்சியளித்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
யெமன் நாட்டின் எழுத்தாளர்களில் ஒருவரான பெரியர் அல் முஸ்லிமாயினுடைய வீட்டுக்கும் இந்த உளவு விமானம் தாக்குதல் நடாத்தியிருப்பதனால், அமெரிக்கா மீது தமக்குள்ள கோபத்தின் அளவை இவ்வளவுதான் என்று கூறமுடியாதுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வூருக்கு வீசப்பட்ட குண்டு மக்களிடையே பும் பீதியைக் கிளப்பியுள்ளது. விவசாயிகள் மிகவும் பயப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் எனவும், அவர்களுக்காகத் தாமும் மிகவும் கவலைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தங்களைப் பீதிக்குள்ளாக்கி துன்புறச் செய்த்தற்கு நல்ல பாடம் பொஸ்டன் தாக்குதல் மூலம் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. தங்கள் நாட்டுக்கு எதிராகச் செயற்படுவதற்காக சிறந்த பாடம் அதன் மூலம் அவர்களுக்குக் கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா அத்தாக்குதலில் அல்கைதா இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவரும், படைவீர்ர்கள் நால்வரும் இறந்ததாக்க் குறிப்பிட்டபோதும், அவர்களை உயிருடன் பிடிப்பதற்கு அமெரிக்கா யெமன் அரசிடம் கேட்டிருந்தால் இலகுவாக அவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2012 இல் ஒபாமா ஆட்சிக் காலத்தில் யெமனுக்கெதிரான தாக்குதல்கள் 46 இனை மேற்கொள்வதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் தாக்குதல் ஒன்றை மட்டுமே நடாத்த உடன்பாடு தெரிவிக்கப்பட்டது என அமெரிக்க தேசிய பாதுகாப்புத் தொடர்பான அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பீட்டர் பாகேன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment