Sunday, April 28, 2013

முஸ்லிம்களுக்காக ஒரு தலைவர் இல்லவே இல்லை... என்றாலும் அவர்களுக்காக நான் நிற்கிறேன்...! - ரணில்

மன்னாரில் இன்று (28) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு உறுப்பினர்கள் சந்திப்பொன்றின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது, முஸ்லிம்களுக்காக தான் குரல்கொடுப்பதாகவும், முஸ்லிம்களுக்காக முன்னின்றுஉழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம்களின் உரிமைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் விட்டுவைத்திருக்கின்றார்கள்.

இந்நாட்டுத் தமிழர்களுக்காக சம்பந்தன் எழுந்து குரல்கொடுக்கிறார். ஆனால், முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்க யாரும் இல்லை. இந்தக் குறையை இல்லாமற்செய்து தான் முஸ்லிம்களுக்காக்க் குரல்கொடுக்கப்போவதாக விக்கிரமசிங்க அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியில் முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகளவு நிற்கின்றபோதும், யாரும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக, அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் பேசுவதற்கு யரைம் முன்வருகிறார்கள் இல்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

2 comments :

Anonymous ,  April 29, 2013 at 11:41 AM  

Well said Mr.R but it is something sanctimonious

Anonymous ,  April 29, 2013 at 2:30 PM  

ஆளும் கட்சியில் முதுகெலும்பு இல்லாத முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சுகபோக வாழ்வை விட்டு, மக்களுக்காகவா பேசப் போகிறார்கள்??
வோட்டுக்களுக்கு மட்டுமே மக்களை தேடி வருவார்கள்.
அந்த நேரம் மொக்கு மக்களும் அவர்கள் பேச்சில் மயங்கிவிடுவார்கள்.
இதுவே இலங்கையில் நடக்கும் ஏமாற்று அரசியல்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com