முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயகவிற்கு உச்சநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு!
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயகவிற்கு உச்சநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சலீம் மர்சூப், பிரியசாத் டெப், ஈவா வனசுந்தர ஆகிய மூவரடங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழு, இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளனர். எதிர்வரும் 29ம் திகதி ஷிரானி பண்டாரநாயக உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென, இவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற விசேட தெரிக்குழுவின் தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறு கோரி, ஷிரானி பண்டாரநாயக சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விலக்கிக்கொள்ளூறு கூறி, சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனு, இன்று கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு ஷிரானி பண்டாரநாயகவிற்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன் இடைக்கால மனுக்களை தாக்கல் செய்த பாராளுமன்ற உறுப்பினர்களான, ஆர். சம்பந்தன் விஜித ஹேரத் ஆகியோருக்கும், எதிர்வரும் 29ம் திகதி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டு, அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ விளக்கமளிக்கையில், மேல் நீதிமன்றத்தில் உள்ள நீதியரசர்கள் தொடாபாக, ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம், பாராளுமன்றத்திற்கே உண்டு என தெரிவித்தார். இதற்கு எதிராக, உத்தரவு பிறப்பிப்பதற்கு, எந்தவொரு நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இல்லையென பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தினால் வலுவிழக்கச்செய்வது, பிழையான முன்னுதாரணமாகுமென்றும், சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment