Monday, April 15, 2013

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த புதிய வழி

சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் உள்ளவர்களுக்கு, பீட்டா அணுக்களின் செயல்பாடுகளைத் தூண்டிவிடுவதன் மூலம், இந்நோய் வராமல் தடுக்கலாம் என அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சாண்டியாகோ மருத்துவக்கழக விஞ்ஞானிகளால் கண்டறிந்துள்ளனர்.

பொதுவாக, நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது கணையமாகும். இதில் உள்ள பீட்டா அணுக்கள் உற்பத்தி செய்யும் இன்சுலின் திரவம், இந்த செயலைப் புரிகின்றது என்பதுதான் இந்தக் கண்டுபிடிப்பு, தற்போது இந்த கண்டுபிடிப்பு மற்றொரு புதிய முயற்சிக்கும் வித்திட்டுள்ளது.

பிராக்டல்கைன் எனப்படும் புரதம் கலந்த மெல்லிய திசுப்படலத்தை பீட்டா அணுக்களின் மீது பொருத்தினால், அவை புரத சத்தை ரத்தத்தில் கலக்கச் செய்து, இன்சுலினை சுரக்க உதவி புரியும் என்பதே விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும். இதற்கு முன்னால் இந்த முயற்சி பற்றி எதிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் இது ஒரு அற்புதக் கண்டுபிடிப்பு என்றும் பேராசிரியர் ஒலேப்ஸ்கி கூறுகின்றார்.

இன்சுலின் திரவ உற்பத்தியும் குளுக்கோஸ் கட்டுப்படுத்தப்படுதலும், சர்க்கரை நோய் வராமலிருக்கத் தேவையான முக்கிய விஷயங்கள் ஆகும். இதனை பிராக்டல்கைன் படலம் திறம்பட செய்வதோடு வேறு எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பது இதன் சிறப்பாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com