Friday, March 15, 2013

முஸ்லிம் இனவாதத்தைக் கட்டியெழுப்புகிறார் சந்திரிக்கா

‘முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரத்துங்க முஸ்லிம் இனவாதத்தைக் கட்டியெழுப்பி - மக்களைக் குழப்பமடையச் செய்து நாட்டை ஸ்தீரமற்ற தன்மைக்குள்ளாக்குவதற்கு முயன்றுகொண்டிருக்கிறார். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டி சிறப்பாக வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் காலத்தில், உள்நாட்டு - வெளிநாட்டு சூழ்ச்சிகள்நாட்டைக் குட்டிச் சுவராக்க முனைகின்ற காலப்பிரிவில், சந்திரிக்கா அம்மையார் முஸ்லிம்களுக்குரிய உரிமைகள் இந்நாட்டில் மறுக்கப்படுகின்றன என்ற கூற்றைக் கட்டவிழ்த்து முஸ்லிம் சிங்களவரிடையே இனவாதப் பிளவினை ஏற்படுத்த மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்’ என வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் குறிப்பிட்டார்.

கல்னேவ இராணுவக் கிராமத்தில் நடைபெற்ற வீதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இணைந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜெனீவா சூழ்ச்சிகளுக்கு ஆதரவு வழங்கும் எதிர்க்கட்சியினராலும் சந்திரிக்கா அம்மையாரினாலும் ஒருபோதும் நாட்டுக்கெதிராக ஒருபோதும் செயற்பட முடியாது எனவும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கெதிராக மேலெழும் எந்த தீய சக்தியையும் தரைமட்டமாக்கும் தன்மை பொதுமக்கள் கைவசம் உள்ளதெனவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  March 15, 2013 at 6:09 PM  

Daughter is following the foot step of her late father.Her father`s Singhala only bill was the start of the disturbances among Majority and minority communities.It lead us to an unexplainable amount of difficulties,even now it takes us.Now the daughter is trying to do the same thing using a different track to capture the political big chair is a different matter but the short cut way of capturing the seat
would lead the different communities into CHAOS and MESS.The experiences we have gained enough to analyse every matters ,if not the country would face a big chaos.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com