யாழில் புடவைவியாபாரிகள் இருவர் பொலிசாரால் கைது!
யாழ். காங்கேசன்துறை வீதியில் வைத்து சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பல இலட்சம் பெறுமதியான புடவைகளை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
யாழ். விஷெட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண தலைமையில் சென்றவர்களால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்படும் போது இருவரிடம் இருந்து 20 மேற்பட்ட புடவை பொதிகளும் புலனாய்வு பொலிஸ் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் மற்றும் புடவை பொதிகளையும் நாளை யாழ். நீதமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment