மழை வெள்ளம் ஆனது வன்னி!
யாழ். மாவட்டம் மற்றும் வன்னிப் பகுதிகளில் நேற்றுக் காலை முதல் கனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக அந்தப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் நெல் அறுவடை நடவடிக்கையும் பாதிப்பிற்குள்ளாகியது.
இலங்கையில் கிழக்கு கடற்பகுதியில் நேற்று முன்தினம் முதல் ஏற்பட்டிருந்த வானிலைக் குழப்பம் காரணமாக கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் பெய்த கனமழை படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து வன்னிப் பகுதிகளிலும், யாழ். மாவட்டத்திலும் கனமழைப் பொழிவை ஏற்படுத்தியுள்ளது.
இதன்காரணமாக ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக நெல் அறுவடை நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகிய நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதன் காரணமாக மீண்டும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. அத்துடன் மக்களது நாளாந்த நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
0 comments :
Post a Comment