Monday, March 18, 2013

‘சிங்களவர்களுக்கு சுன்னத் எடுத்து, தொப்பி போட வரவேண்டாம்’ என முழங்குகிறார் சோபித்த

இஸ்லாமியர்கள் தங்கள் சமய முறைப்படி சுன்னத் எடுப்பதற்கு நாங்கள் விரோதம் தெரிவிக்காதவிடத்தும், சிங்களவர்களுக்கு சுன்னத் செய்து தொப்பி போட வருவதையிட்டு நாங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம் என ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர் ஓமல் பே சோபித்த தேரர் குறிப்பிடுகிறார்.
நேற்று மாலை, ஹோமகம பிடிப்பெனபுராண மகா விகாரையில் ‘சிங்களவர்களின் கைகளை ஓங்கச் செய்வோம் - நாட்டைக் காப்போம்’ எனும் கருப்பொருளில் நடாத்தப்பட்ட பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது,

‘முஸ்லிம்களின் சமய முறைப்படி சுன்னத் எடுப்பதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டோம். ஆயினும் முஸ்லிம்கள், முஸ்லிம்களின் சமய முறைப்படி பெளத்தர்களாகிய எங்களையும் சுன்னத் எடுக்க வருவதாயின் நாங்கள் அதற்கு எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்போம். முஸ்லிம் ஆண்கள் தலையில் தொப்பி போடுவதற்கும், முஸ்லிம் பெண்கள் பர்தா ஆடை அணிவதற்கும் நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டோம். ஆயினும் முஸ்லிம்கள் பௌத்தர்களாகிய எங்களுக்கு தொப்பி அணிவிக்க வருவதற்கும், பௌத்த பெண்களுக்கு பர்தா அணிவிக்க வருவதற்கும் நாங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்போம். முஸ்லிம்கள், அவர்களின் கலாச்சாரப் பாரம்பரியங்களை, எங்களுக்குட்புகுத்த முனைவதற்கு எதிராக பௌத்தர்களாகிய நாங்கள் எழுந்து நிற்க வேண்டிய கடப்பாடு உள்ளது. முஸ்லிம்களின் மத அநுஷ்டானப்படியான முறைமைக்கு அரசாங்கமோ அல்லது வேறு இயக்கங்களோ ஆதரவு நல்குகின்றபோது, நாங்களும் ஆடைகளைக் களைத்துவிட்டு முஸ்லிம்கள் எங்களுக்கும் சுன்னத் எடுக்கும் வரை பார்த்திருக்க வேண்டுமான என்ன? உண்மையென்னவென்றால் இந்நாட்டு அரசு எங்களுக்கு அதைத்தான் சொல்கிறது. இன்று அரசாங்கம் என்ன சொல்கிறது? ஹலால் இருக்கட்டும். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம். அதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டாம். அவ்வாறு கூக்குரலிடுவதற்கு உரிமை கிடையாது.

ஹலாலுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அடிப்படைவாதிகள், இனவாதிகள் என்று குறிப்பிடுகிறார்கள். நாங்கள் தெளிவாகச் சொல்கிறோம். நாங்கள் ஹலாலுக்கு எதிராகச் செயற்படுவதில்லை. இலங்கையிலுள்ள பெளத்த பிக்குகள் ஹலாலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. எதிர்ப்பதற்குத் தேவையும் இல்லை. ஆயினும், ஹலால் எனும் இழிந்த வேலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். இஸ்லாமிய சமயத்திலுள்ள மதச் சட்டம், மத நம்பிக்கையை முஸ்லிம்களுக்கு எதிராகப் பிரயோகிப்பதை எதிர்க்கிறோம். முஸ்லிம்கள் ஹலால் உணவை உட்கொள்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. என்றாலும் சிங்கள பௌத்தர்களாகிய எங்களுக்கு ஹலாலை ஊட்ட முனையக் கூடாது. இன்று ஹலால் முழு நாட்டையும் பற்றிப்பிடித்துள்ள புற்றுநோயாக மாறியுள்ளது. அனைத்து ஹலால் செயற்பாடுகளும் இயற்கைக்கு மாற்றமானதே’

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com