இனவாதத்தை தூண்டி எஸ்எம்எஸ் அனுப்பிய இருவர் கைது.
தொலைபேசியூடாக இனவாதத்தை தூண்டிய விதத்தில் குறுந்தகவல்களை அனுப்பிய இருவர், கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு குறுந்தகவல்கள் அனுப்புவோர் தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறு, பொலிஸார், பொது மக்களை கேட்டுள்ளனர். இவ்வாறானவர்கள் தொடர்பான தகவல்கள் இருந்தால் உடனடியாக 0112 320 145 அல்லது 0112 320 141 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒருசிலர் எவ்வித தகவல்களையும் ஆராயாமல், தமக்கு கிடைக்கும் குறுந்தகவல்களை ஏனையோருடன் பகிர்வதன் மூலம், அவர்களும் இந்த இனவாதத்தை தூண்டுவோராக கருதப்பட இடமுண்டு. இதனால் அவதானத்துடன் செயற்படுவது பொது மக்களின் பொறுப்பாகுமென, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment