Sunday, March 17, 2013

இனவாதியை வெளியேற்றுவீர்! கல்முனை வைத்தியசாலை அத்தியட்சகரின் செயற்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அத்தியட்சகராக ஜாபீர் உள்ளார். இவர் முன்னர் மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்தபோது இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற காரணத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டார். அதாவுல்லாவிற்கு நெருக்கமான இவர் மட்டக்களப்பிலிருந்து இடமாற்றம் பெற்றபோது, கல்முனை வைத்தியசாலையில் பதவி உயர்வினையும் பெற்றுக்கொண்டார். இது அவரது அரசியல் பின்புலம் பற்றியது.

ஆனால் இவரது மறுபுறம் மிகவும் ஆபத்தானதாக அறியப்படுகின்றது. பிரதேச மக்களாலும் சக ஊழியர்களாலும் இஸ்லாமிய தீவிரவாதி என இவர் வர்ணிக்கப்படுகின்றார்.

தமிழ் மக்களுடைய விடுதலைப்போட்டம் : „பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு கோமணம் பறிபோனது' என்ற கதைக்கு ஒப்பிடப்படுவதற்கு, அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கண்டுள்ள பின்னடைவுகளே சிறந்த உதாரணங்களாகும்.

அம்பாறை மாவட்டத்தின் உதவி அரசாங்க பிரிவுகள் உட்பட சகல அரச திணைக்களங்கள் நிறுவனங்களும் துண்டாடப்பட்டு ஒவ்வொன்றுக்கும் „முஸ்லிம் பிரிவு' என்ற பெயருடன் அரங்கேற்றப்பட்ட நிகழ்சி நிரல்களால் தமிழ் சமுதாயம் இழந்தவை இங்கு அடுக்கினால் பக்கங்கள் போதாமல் போகலாம். அதற்கு காரணம் தமிழர் தரப்பின் எதிர்ப்பு அரசியலும், முஸ்லிம் தரப்பின் இணக்க அரசியலும் அதற்கும் மேலாக „எவன் பொண்டில் எவனுடன் போனால் என்ன லெப்பைக்கு நாலு பணம் வந்தால் போதும'; எனச் செயற்படும் தமிழ் அதிகாரிகளின் காட்டிக்கொடுப்புக்களும் என்றால் மிகையாகாது.

இதற்கும் அப்பால் „முஸ்லிம் பிரிவு" என்று தமக்கென தனியாக அமைத்துக்கொண்ட முஸ்லிம் தரப்பினர் அவர்களது எல்லைகளுடன் நின்றுவிடவில்லை. தமது இணக்க அரசியலின் பலத்தினைக்கொண்டு தமிழர் நிர்வாக பிரிவுகளுக்குள்ளும் நுழைந்து அவற்றின் வளங்களை சுரண்டுவதிலும், அதன் கலாச்சாரா விழுமியங்கள் உட்பட சரித்திரத்தையே மாற்றியமைப்பதிலும் திட்டமிட்டு தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்கள் என்றால் அதுவும் மிகையாகாது.

மேற்படி இஸ்லாமிய தீவிரவாத நிகழ்சி நிரலின்கீழ்தான் கல்முனை ஆதாரவைத்திசாலையின் அத்தியட்சகர் ஜாபீரும் செயற்பட்டு வருகின்றார்.

வைத்தியசாலையின் நிர்வாகத்தை கையேற்ற மறுகணமே அவர் செய்த முதலாவது செயற்பாடாக வைத்தியசாலையில் முக்கிய அறைகளில் தொங்கிக்கொண்டிருந்த இந்து இறைபடங்களை அகற்றியமையாகும். ஒரு இஸ்லாமியனாக இந்து சமயத்தில் உடன்பாடு இல்லை என்றால் தனது அறையில் இருந்த படத்தை அகற்றியதை எவரும் எதிர்க்க முடியாது. காரணம் அது தனிமனித உரிமை.

ஆனால் இவர் சக அதிகாரிகளின் அறைகளில் மாத்திரமல்ல நோயாளிகள் தங்கள் அறைகளில் படங்களை வைத்திருப்பதற்கு கூட தடை விதித்திருக்கின்றார்.

கல்முனை வைத்தியசாலையில் சுமார் 35 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் விநாயகர் ஆலய பூசைகளை கூட சுதந்திரமா நடாத்துவற்கு நடைமுறைச் சாத்தியமற்ற நிபந்தனைகளை விதித்துள்ளார்.

ஆலய அபிவிருத்திக்கு என இந்து காலச்சார அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியை ஆலய அபிவிருத்திக்கு செலவிட விடாது, வைத்தியசாலையின் பிற செயற்பாடுகளுக்கு அப்பணத்தினை எடுத்துள்ளார். இவரின் இச்செயற்பாட்டின் நோக்கம் ஆலய அபிவிருத்தியை தடைசெய்வது என்று ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வைத்தியசாலைக்கு என வரும் புதிய உபகரணங்கள் மேலதிக சலுகைகள் என்பவற்றை சூட்சுமமாக அஷ்ரப் வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளார்.

தொடர்ச்சியாக தமிழ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அவ்விடங்களை முஸ்லிம்களை கொண்டு நிரப்பி வருவதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று இத்தனை சவால்களுக்கும் இன்னல்களுக்கும் வைத்தியசாலை தமிழ் அதிகாரிகளும் தமிழ் மக்களும் முகம் கொடுக்கின்றனர் என்ற செய்தி தமிழ் அரசியல்வாதிகளுக்கு சொல்லப்பட்டுள்ளபோதும், அவர்கள் இவ்விடயங்களை கண்டு கொண்டதாக இல்லை. ஒருபுறம் கருணாவும் பிள்ளையானும் , அலி சாகிர் மௌலானவினதும் ஹிஸ்புல்லாவினதும் மந்திரத்தில் மயங்கிக்கிடக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மூச்சு விடாமல் இருப்பதற்கு காரணம் கடந்த கிழக்கு மாகாண தேர்தலில் முஸ்லிம் தரப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும் முஸ்லிம்களுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் என கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்களை ஏமாற்றியதுபோல் எதிர்காலங்களில் தமிழ் மக்களை ஏமாற்ற இடமில்லாமல் போகும் என்ற அச்சமா என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

எது எவ்வாறயினும் இவ்விடயத்தினை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்ற முடிவுக்குவந்த தமிழர் சீர்திருத்த அமைப்பு, தமிழர் இளைஞர் அணி ஆகியவற்றை சேர்ந்த இளைஞர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று 16.03.2013 நாடத்தியுள்ளனர். முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசுடனான இணக்கத்தின் உடான பலத்தின மீறி இதற்கு சாதகமான பலன் கிடைக்குமா என்பது இங்கு கேள்விக்குரியதே.

தமிழ் அரசியல்வாதிகள் இவ்விடயத்தினை கண்டு கொள்ளாதவிடத்து வைத்தியசாலையின் தமிழ் அதிகாரிகள் குறிப்பிட்ட அமைப்புகளிடம் உதவி கோரியதன் அடிப்படையிலேயே மேற்படி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.






2 comments :

kalmunainews March 17, 2013 at 2:06 AM  

டாக்டர் ஜாபீர் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலைக்கு அத்தியட்சகராக நியமிக்கப் பட்டதிலிருந்து இனவாத்தைக் கக்கும் சில தமிழ் இனவாதிகள் முஸ்லிமானவர் ஒருவர் கல்முனை வடக்கு வைத்திய சாலையில் அத்தியட்சகராக இருக்கக் கூடாது என்பதற்காக பல ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருகின்றனர்.
வேலையற்ற வீதி சுற்றிகள் சிலரை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களே வைத்திய சாலையில் உங்களால் சொல்லப்படும் குற்றச் சாட்டுக்களை நிருபிக்க வைத்திய சாலையில் கடமை புரியும் ஒரு ஊழியரையாவது ஆர்ப்பாட்டத்தில் நிறுத்தி இருக்கலாமே

Anonymous ,  March 17, 2013 at 2:48 AM  

பல்லின மக்கள் வாழும் இலங்கையில் மதம், மொழி, இன வேறுபாடுகள், தீவிரவாதம், துவேசம் போன்ற கீழ்த்தரமான செயல் பாடுகள் ஆரோக்கியமானதல்ல. ஏற்கனவே நாம் எல்லோரும் அதன் விளைவுகளை கண்டு, அனுபவித்துள்ளோம். எனவே, முதலில் படித்தவர்கள், அதிகாரிகள், பெரும் பதவியிலுள்ளவர்கள் மிகவும் பொறுப்புடன் நடக்க கற்றுக்கொள்ள வேண்டும். அநாகரிகமாக செயல்படும் எவராயினும் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்.!

அல் ஹக்கீம்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com