Monday, March 18, 2013

புத்தரை பச்சை குத்திவந்த பிரித்தானிய பிரஜை விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பப்பட்டார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஆண்டனி ராட்கிளிப் எனும் சுற்றுலாப் பயணி இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். பண்டாரா நாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரது கையில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருப்பதை விமான நிலைய அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

இவ்வாறு பச்சை குத்துவது புத்தரை அவமதிப்பதாகும் என்று கூறி அவரை நாட்டுக்குள் அனுமதிக்காமல், திருப்பி அனுப்பி விட்டனர்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ''பச்சை குத்தி இருப்பதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, அவர் புதரைப் பற்றி தரக்குறைவாக பேசினார். இலங்கைக்குள் சென்று இதுபோல் பேசினால் அவருக்குதான் ஆபத்து'' ஏற்படலாம் என்ற காரணத்தினால் திருப்பி அனுப்பினோம் என ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

இருப்பி அனுப்பப்பட்டவுடன் மலேசியாவிற்கு சென்ற அவரை மலேசிய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினரும் இதே காரணத்திற்காக நாட்டினுள் அனுமதிக்கவில்லை எனத் தெரியவருகின்றது.

இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 3 பிரெஞ்சு சுற்றுலா பயணிகள் புத்தரின் சிலைக்கு முத்தமிட்டனர். இது புத்தரை அவமதிக்கும் செயல் என்று கூறி, அவர்களுக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

1 comments :

Arya ,  March 18, 2013 at 12:41 AM  

நாம் நமது நாட்டு கலாசாரத்தை காக்க வேண்டும் , இன்னொரு தாய்லாந்த் உருவாக அனுமதிக்க கூடாது , இங்கு வரும் வெள்ளையர்கள் எம் நாட்டு கலாசாரம் , சமயம், பண்பாடு , ஒழுக்கம் என்பனவற்றை மதித்து செயற்பட வேண்டும் , தாய்லாந்த் மாதிரி அந்நாட்டு மக்களை நவீன அடிமைகள் ஆக்கியது போன்று இங்கு செயல் பட அனுமதிக்கக் கூடாது , தாய்லாந்தில் பல பகுதிகளில் அந்நாட்டு மக்கள் அடிமைகள் போன்றும் வெள்ளையர்கள் அவர்களை ஆட்டு விப்பவர்களாகவும் உள்ளனர் , இது தாய்லாந்தில் மட்டும் அல்ல பல ஆசியா நாடுகளில் நடகின்றது (சீனா தவிர்த்து) .
பலர் பாலியல் அடிமைகளாகவும் உள்ளனர் , இப்படி பட்டவர்களை நாடு கடத்துவதே சிறந்த்தது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com