Thursday, March 7, 2013

20 வைத்தியரகளுக்கு வேலைபோனது!

அவசர மருத்துவ சேவைகளை கடந்தவாரம் வழங்குவதற்கு மறுத்த வைத்தியர்கள் 20 பேர் பற்றி சுகாதார அமைச்சுக்கு கூறப்பட்டதனைத் தொடர்ந்து அமைச்சு இவர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க நேற்று தெரிவித்தார்.

வைத்தியர்கள் தமது வேலை நீக்க கடிதத்தை பெற்றுள்ளனர் என்றும் பணிப்பாளர் டாக்டர் ஜயசிங்க தெரிவித்தார் இதே வேளை தமக்கு வளங்கப்பட்ட இடமாற்றத்தை செயற்படுத்தினால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக வைத்தியர்கள் சிலர் எச்சரித்திருந்திருந்த நிலையிலேயே இவர்களுக்கு பணிணீக்க கடிதங்கள் இன்று அமைச்சால் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளமை மருத்துவ விதிகளை மீறுவதாகும். இவ்வாறு வைத்தியசாலையிலிருந்து நிறுத்தப்பட்ட வைத்தியர்கள் சிலர் தேசிய வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் பதவிகளை வகிப்பவர்களாவர்.

அவசர மருத்துவ சேவையை வழங்க மறுப்பது குற்றவியல் குற்றமாகும். அது மருத்துவ விதிகளுக்கு எதிரானது. ஒரு நோயாளி இறந்துக்கொண்டிருக்கும்போது வைத்தியர்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கக்கூடாது எனக்குறிப்பிடார்.

1 comments :

Anonymous ,  March 8, 2013 at 3:23 AM  

well done do some more

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com