Tuesday, February 5, 2013

வெளி பார்வைக்கு தான் நாம் ஆடு புலி உள்ளுக்குள் சிங்கள இனவாத தந்தையின் பிள்ளைகள் நாம்

தாய் நாட்டினை மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கு துடிக்கும் துரோகிகளே. உங்களுக்கு சர்வதேசப்பயங்கரவாதிகளான, புலிகளும், ஜே.ஆர் ஜயவர்த்தனாவும் இன்று இருந்திருந்தால் வீட்டைவிட்டு வெளியில் இறங்கியிருக்க முடியுமா? வடக்கு, கிழக்கில் இனவாதம் பேசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெற்கில் தமிழ், சிங்கள இனவாதத்தின் தந்தையர்களான ஐ.தே.கட்சியினருடன் சங்கமமாகினர்.

1977ல் பாராளுமன்ற பெரும்பான்மையுடன் ஜனாதிபதிக்கான ஆசனத்தில் அமர்ந்த ஜே.ஆர். ஜயவர்தனா அன்று பாராளுமன்றத்தின்ஆயுட்காலம் முடிவடைந்த 1983 காலப்பகுதியில் தேர்தல் ஒன்றினை நடாத்தமுடியாது சர்வஜன வாக்கெடுப்பு என்னும் புதியதோர் பாராளுமன்ற அரசியலை அமுல்படுத்தி தமது கட்சி உறுப்பினர்களின் பதவியினை 12 வருடங்களுக்கு நீடித்தாரே அன்று நீங்களனைவரும் எங்கு சென்றிருந்தீர்கள்?

12 வருடங்களுக்கு 8 உறுப்பினர்களை மட்டும் வைததுக்கொண்டு பாராளுமன்ற ஆட்சியினை நடாத்தியபோது நீங்கள் அனைவரும் விண்வெளிக்கா சென்றிருந்தீர்கள்? 1983ல் நடாத்த வேண்டிய ஜனாதிபதித் தோதலுக்கு முகங்கொடுக்க முடியாத ஜே.ஆர் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையினை (16.10.1980) பறித்துவிட்டது மட்டுமன்றி. எதிர்க்கட்சிகளின் பத்திரிகைகள் அனைத்தையும் தடைசெய்துவிட்டு 1982ல் தேர்தலை நடாத்தினாரே அன்று ஏன் உங்களால் ஜனநாயகத்திற்கு குரல் கொடுக்க முடியவில்லை?

அப்படி என்றால் நீங்கள் அனைவஐம் பச்சோந்திகளே கடந்த 17 வருடகாலம் (1977—1994) நாட்டைச் சூறையாடிய திருட்டுக் கும்பல்களுடன் ஒன்றிணைந்து இன்று இலங்கை மக்களின் ஆதி மூலதனங்களை கொள்ளையிட புறப்பட்டுள்ளீர்களே அன்றி ஜனநாயகத்திற்கு குரல் கொடுக்கின்றீர்களா? என்றால் இல்லை.

எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்க கட்சிகளின் இயக்கத்தில் இடம்பெறும் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு இடையிலான உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வுகளை நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு எதிர்வரும்(11.02.2013)திங்கட்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சி எதிர்ப்பியக்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, நவ சம சமாஜக் கட்சி, நவ சிஹல உறுமய, முஸ்லிம்-தமிழ் கூட்டணி, றுகுணு மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, மௌபிம ஜனதா பெரமுன ஆகிய கட்சிகளும் சுதந்திரத்திற்கான மேடை அமைப்பு போன்றவற்றின் தலைவர்கள் மற்றும் முன்னணி பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்

1 comments :

Anonymous ,  February 5, 2013 at 7:36 PM  

A kind of publicity is needed to come to the power back,but we hope the citizens have more intelligence and political knowledge to face every circumstances,bacause they have learnt a lot in every hard situation.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com