''நல்லா வருவடா'' திரைப்பட வெளியீட்டுவிழா (படங்கள் இணைப்பு)
புளு றிபண் மீடியா மற்றும் மருதமுனை ஒன்லைன் இணைந்து தயாரித்த ''நல்லா வருவடா'' குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு விழா நேற்று மாலை 8.00 மணிக்கு மருதமுனை மக்கள் மண்டபத்தில் திரையிடப்பட்டது.
டாக்டர் எஸ்.எஸ். ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்துசிறப்பித்தார். முஹம்மது ரயீஸ் நிசாம் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இக்குறுந்திரைப்படம் வெளியீட்டு விழா நிகழ்வில் மருதமுனையின் கலைத்திறமைகளை ஊக்குவிக்கும் பொருட்டு மருதமுனை ஒன்லைன் பிக்ஷர்ஸ் பிரிவின் அங்குரார்ப்பணமும் நடைபெற்றது.
மருதமுனை ஒன்லைன் பிக்ஷர்ஸ் இலச்சினையை டாக்டர் எஸ்.எஸ். ஜெமீல் வெளியிட, சட்டத்தரணியும் மருதமுனை ஒன்லைனின் ஆலோசகருமான எம்.ஏ.எம். முபீத் பெற்றுக்கொண்டார்.
மருதமுனை ஒன்லைன் பிக்ஷர்ஸ் இலச்சினையை டாக்டர் எஸ்.எஸ். ஜெமீல் வெளியிட, சட்டத்தரணியும் மருதமுனை ஒன்லைனின் ஆலோசகருமான எம்.ஏ.எம். முபீத் பெற்றுக்கொண்டார்.
0 comments :
Post a Comment