லண்டன் புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தினருக்கு கம்பி நீட்டினார் சிறிதரன்.
புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற புங்குடுதீவு சமூகத்தினர் புலத்திலுள்ள புங்குடுதீவு மக்களுக்கு தம்மாலான உதவிகளை செய்துவருகின்றனர். அந்தவரிசையில் அண்மையில் லண்டன் புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தினரால் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி சங்கத்தினர் எந்தவொரு அரசியல் சக்திகளுடனும் இணையாமல் தமது மக்களுக்கான சேவைகளை பிரதேசத்திலுள்ள ஆர்வலர்கள் மற்றும் சமயப்பெரியார்கள் ஊடாகவே செய்து வருகின்றனர்.
இவ்வாறே அண்மையில் வழங்கப்பட்ட தென்னங்கன்றுகளும் புங்குடுதீவு ஆலய அருட் தந்தை லியோ ஆம்ஸ்ரோங் ஊடாக மக்களுக்கு பகிந்தளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அருட்தந்தையார் 625 தென்னங்கன்றுகளை மக்களுக்கு வழங்கி வைத்துள்ளார். இரண்டாம் கட்டமாக 325 தென்னங்கன்றுகள் வழங்க ஏற்பாடாகியிருந்த நிகழ்வில் சிவபூசையினுள் கரடி புகுந்த கதையாக நுழைந்த சிறிதரன் அந்நிகழ்வினை படமெடுத்து தனது சகோதரனின் இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
இச்செய்தியினையும் படங்களையும் கண்ட லண்டன் புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தினர் மிகவும் விசனம் அடைந்துள்ளனர். எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க விரும்புகின்றபோதும் சிறிதரன் இச்சிறு விடயங்களையும் தனது அர்ப்ப அரசியல் விளம்பரத்திற்கு பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறிதரனின் சகோதரனின் இணையத்தளத்தில் குறித்த உதவி சிறிதரனால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment