Saturday, February 9, 2013

யாழில் வடிவான தங்கையைக் காட்டி விட்டு இறுதியில் அக்காளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம்

எங்கள் வாழ்வின் பழையவற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, ஆச்சரியப்படக்கூடிய நிகழ்வு களை அறிந்துகொள்ள முடியும். முன்னைய காலத்தில் பெண்பிள்ளைகள் இருக்கின்ற வீட்டு வேலிகள் மிகவும் உயர்ந்தி ருக்குமாம். அந்தளவுக்குப் பாதுகாப்பு. அதேநேரம் திருமணத்துக்கு முன்பாக பெண் பார்த்தல் என்ற நிகழ்வில் சுத்துமாத்துக்கள் நடப்பதான தகவல்களை அறியும்போது, விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும்போல் இருக்கும். பெண் பார்க்கின்ற சம்பிரதாயத்தின்போது, இளமையாகவும் அழகாகவும் இருக்கக்கூடிய தங்கையை மணப்பெண் என்று மாப்பிள்ளைக்கு காட்டிவிட்டு பின்னர் திருமணம் நடக்கும்போது அக்காவை மணவறையில் இருத்தி விட்ட சம்ப வங்கள் நிறையவே நடந்ததுண்டு.

இன்றைய காலம்போல மணவறையில் வைத்தே மணப் பெண்ணையும், மணமகனை யும் மாற்றும் காலம் அப்போது அறவேயில்லை.
அதனால் அக்காளுக்கு தாலிகட்டி வாழ்க்கை நடத்திய சம்பவங்கள் நிறையவே உண்டு. இந்தச் சம்பவங்கள் இப்போது திருமணத்தில் நடைபெறாவிட்டாலும் தங்கையைக் காட்டி அக் காளுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற சம்பவங்கள் வேறு விடயங்களில் தாராளமாக நடக்கின்றது. அதில் யாழ்ப்பாணம்-கொழும்பு பஸ் சேவை யில் இந்த நடைமுறை ஏராளம். நேற்றுமுன்தினம் இரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சேவை நடத்தும் தனியார் சொகுசு பஸ் ஒன்றில் பயணிகள் ஏற்றப்பட்டனர். ஒரு ஆசனத்து ஆயிரத்து 350 ரூபாய் அறவிடப்பட்டது.

அந்த சொகுசு பஸ் ஒரு சில கிலோமீற்றர் தூரம் ஓடியதும் சடுதியாக நிறுத்தப்பட்டது. வாகனம் பழுதாகிவிட்டது. எனவே இன்னொரு பஸ்ஸில் நீங்கள் பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற அறிவித்தல் விடுக்கப் பட்ட கையோடு ஒரு உறண்டல் பஸ் வந்து சேர்ந்தது. எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத அந்த பஸ்ஸில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏறி அமர்ந்து கொண்டனர். ஏன்தான் இப்படி அநியாயம் செய்கின்றீர்கள் என்ற பயணிகளின் முனுமுனுப்பில் 50 ரூபாய் மட்டும் திருப்பிக் கொடுக்கப்பட்டது. ஆக, ஆயிரத்து 300 ரூபாய் கொடுத்து நாரி முறிந்துபோகும் அளவில் அந்த பஸ் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது.

இதுதான் தங்கையைக் காட்டி அக்காளுக்கு திருமணம் செய்யும் உறண்டல் கலாசாரம். ஆம்! சொகுசு பஸ்ஸில் பயணிகளை ஏற்றி விட்டு இனி அவர்கள் இறங்கி வேறு பஸ்ஸு க்குச் செல்ல முடியாது என்ற அளவில் சொகுசு பஸ் பழுதென்று கூறி, சாதாரண பஸ்ஸில் பயணி களை ஏற்றும் மிகப் பெரும் கொடுஞ் செயலை யார்தான் தடுப்பார்கள். இறைவா! நடந்துமுடியட்டும்.நாங்கள் பாவம் செய்தவர்கள். பாவக்கரைப்பு நடக்கிறது என்று மெளனமாக இருக்கக் கற்றுக்கொண்ட எங்க ளிடம் யாரும் எப்படியும் நடந்துகொள்ளலாம். இதை விதி என்று கூறிவிட்டு துன்பத்தைச் சுமந்து கொள்வோம்.

1 comments :

Anonymous ,  February 9, 2013 at 10:32 AM  

Cheat Unfair and Dishonest are the policies most of the people.Religious activities,religious
preaching traditions does in fact to please the God.
They should know why they are failing
in these virtues....? If they found the proper answer for sure they would cleanse the heart and defnitely we can expect a better future society.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com