Friday, February 1, 2013

இலங்கையில் இராணுவரீதியில் கால் வைக்கிறது நெதர்லாந்து!

சர்வதேச வர்த்தகக் கப்பல் களுக்கு கடற்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்குவதற்கான முக்கிய தளமாக கொழும்பை பயன்படுத்த நெதர்லாந்து கடற்படை தீர்மானித்துள்ளது. இதற்கமைய கப்பல்கள் டச்சு பாதுகாப்பு படையினரை இலங்கையின் சில துறைமுகங்களில் ஏற்றி இறக்கும் ஒழுங்கொன்று இலங்கை அரசாங்கத்துடன் செய்யப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்துக்கமைய ஆயுதங்கள், வெடிபொருட்கள் கையாளப்படுமென கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதரகம் கூறியுள்ளது.

டச்சு (நெதர்லாந்து) கப்பலிலிருந்து கொழும்பு துறைமுகத்தில் கடந்த செவ்வாய் இறங்கிய டச்சு கடற்படையினர் பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று நெதர்லாந்து பயணமாகியுள்ளனர்.

இந்தக் கடற்படையினர் எகிப்திலுள்ள சுயெஸ் கால்வாயிலிருந்து புறப்பட்ட கப்பலுக்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்ட கப்பல் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். கப்பல் மீதான கடற்கொள்ளையரின் தாக்குதல்கள் அநேகமாக சோமாலிய கரைக்கு அப்பால் அரபுக்கடலில் மேற்கொள்ளப் படுகின்றன.

இலங்கை கேந்திர முக்கியத் துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளதால் கப்பல் பாதுகாப்பு மையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் முக்கிய சர்வதேச கடல்வழிப்பாதையை பாதுகாப்பதற்கான இலங்கையுடனான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது என நெதர்லாந்து தூதரகம் கூறியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com