Sunday, February 17, 2013

வடக்கில் தாய்மார் தங்களது துன்பங்களை ரணிலிடம் முன்வைக்கின்றனர்!


வடக்கில் யுத்தத்தின்போது காணாமற் போனதாகக் கூறப்படும் 3000 பேரின் பெற்றோர் கிளிநொச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தனர். அங்கு ஒரு பெண்மணி எதிர்கட்சித் தலைவரின் கால்களில் விழுந்து வணங்கி தன்னுடைய துன்பத்தைச் சொன்னார்.


அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்திபாராளுமன்றத்திற்கும் இந்த விடயம் பற்றி எடுத்துக்கூறி வெகுவிரைவில் இதற்குப் பரிகாரம் தேடித் தருவதாக அவர் அங்கு குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளின் தலைவர்களான எம்.ஏ. சுமந்திரன், மாவை சேனாதிராசா, மனோ கணேசன், அஸாத் ஸாலி, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(கேஎப்)



1 comments :

Anonymous ,  February 18, 2013 at 12:27 PM  

ரணில் நிலை கவலை இடம். அவன் கால்களில் விழுந்துவணங்கினால் என்ன ஆகும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com