டக்ளசின் கஞ்சிக்குள் மண்ணைத் தூவ தயாராகி விட்டார் விஜயகலா!
சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மண்ணென்ணை மகேஸ்வரனின் மனைவி விஜயகலா. இவர் தனது கணவன் அங்கத்துவம் வகித்த ஐக்கிய தேசியக் கட்சியில் அவரின் மறைவின் பின்னர் யாழ் மாவட்டத்தில் தேர்தலில் குதித்து வெற்றி பெற்றார்.
தற்போது விஜயகலா ஐக்கிய தேசியக் கட்சிக்கு விடை கொடுத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக நம்பந்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. இவ்வாறான தகவல்கள் முன்னரும் பலதடவைகள் பரவியிருந்தது. அமைச்சர்கள் யாழ்பாணம் சென்றால் விஜயகலா வீட்டில் விருந்துண்டுதான் வெளியேறுவார்கள். இதற்கு நட்பு ரீதியான விஜயம் என்று விளக்கம் கூறப்பட்டு வந்தது.
ஆனால் இந்த முறை ஜனாதிபதியின் நிகழ்சிநிரலையே மாற்றி அமைத்திருக்கின்றார் விஜயகலா. அது யாதெனில் மஹிந்தரின் நிகழ்சி நிரலில் காரை நகர் என்ற சொல்லே இருக்கவில்லை. ஆனால் நான் வேண்டுமென்றால் நீங்கள் எங்கள் காரைநகர் மக்களை வந்து பார்க்கவேண்டுமென்றிருக்கின்றார். எவ்வித முன்னறிவுப்புக்களுமின்றி நிகழ்சி நிரலை மாற்றிக்கொண்டு மஹிந்தர் காரை நகர் சென்று திரும்பியிருக்கின்றார்.
அதன் பின்னர் நிகழ்ந்த சகல நிகழ்வுகளிலும் விஐபிக்கள் மேடையில் யாழ் மாவட்டத்திற்கான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அங்கஜனுக்கு நிகராக அல்லது ஒரு படி மேல் என்ற நிலையில் அமர்ந்திருந்தார் விஜயகலா.
ஜனாதிபதி மற்றும் விஐபிக்களுக்கென்ற மேடையில் விஜயகலா அமர்ந்திருந்தபோது அதிதிகளுக்கான வரிசையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி மற்றும் ஈபிடிபி யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா ஆகியோர் அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகலாவின் கட்சித்தாவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கான நாட்கள் நெருங்கிவிட்டதென நம்பப்படும் அதேநேரம், யாழ் மாவட்டத்தில் அடுத்து நிகழவிருக்கும் பாரிய அரசியல் கள மாற்றங்கள் பலரையும் அதிர்சிக்கு உள்ளாக்கும் என்பது திண்ணம்.
இந்நிலையில் எதிர்கின்றவர்களுக்கு நான்தான் ஏகப்பிரதிநிதி என்கின்ற தாடிகாரரின் நிலைமை என்னவாகப்போகின்றது?
0 comments :
Post a Comment