நயீனாதீவில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ஷ
நயீனாதீவு நாகபூசணி அம்மன் தேவஸ்தானத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று விசேட பூஜைவழிபாடுகளில் ஈடுபட்டார். இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி இன்று காலை யாழ்.சுன்னாகத்தில் யாழ்.ஒளி மின்சார திட்டத்தை ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி நயீனாதீவிற்கு விஜயம் செய்து, நாகவிகாரையில் நடைபெற்ற பூஜைவழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் நயீனாதீவிற்கு விஜயம் செய்தார்.
இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment