பொலிஸாரை நண்பர்காளாக பாருங்கள்!
இலங்கையில் பொலிஸாரைப் பகைவர்களாகவும் எதிரிகளாகவும் மக்கள் பார்ப்பதை விடுத்து நண்பர்காளாக பார்க்கவேண்டும் என்று நேற்று(22.02.2013) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்தார்.
தற்கோதும் பொதுமக்கள் பொலிஸாரை தங்கள் எதிர்கள் போலவே பார்த்து வருகின்றனர் இந்த நிலை மாறவேண்டும் பொலிஸாரை நண்பர்களாக பார்கும்போதுதான் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான நல்லுறவு மேம்படுத்தப்படும் என்றார்.
உதாரணமாக அனைத்து பொலிஸ் நிலையங்களும் ஒரு நாள் மூடப்பட்டால் சட்ட ஒழுங்குகள் எவ்வாறு இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காடந்த 30 வருடகாலமாக பொலிஸ் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் யாழ் மாவட்டத்தில் பதவியேற்றமை மகிழ்ச்சியாளிப்பதாகவும் இங்கு போக்குவரத்து சம்மந்தமான விடயங்களில் முக்கிய கவனம் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment