‘சிறுவயதில் பெற்றோரின் நண்பரினால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டேன்’
- ரவி சங்கரின் மகள் அம்பலப்படுத்துகிறார்!
தனது பெற்றோரின் நெருங்கிய நண்பரொருவரினால் தான் சிறுவயதில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக இந்தியாவின் இசைஞானி ரவி சங்கரின் மகள் அனுஷ்கா சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கெதிரான வன்முறைகளை எதிர்க்கும்இயக்கத்தின் எதிர்ப்புப் பேரணியின் காணொளி ஒன்றுக்காக இணைந்து குரல்கொடுக்கும் போது 31 வயதுடைய அனுஷ்கா மேலும் குறிப்பிடுகையில்,
சிறுவயதில் தான் முகம்கொடுத்த அந்த அசாதாரண நிலை பற்றிய கவலை இன்னும் தன்னை வாட்டுவதாகவும், அதிலிருந்த மீள முடியாதிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலண்டனிலுள்ள தனது சொந்த வீட்டிலிருந்து உலக மக்களை விழிக்கின்ற அனுஷ்கா சங்கர், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு எதிராக எல்லோரும் குரல்கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment