Saturday, February 2, 2013

சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!

2012 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் உயர் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.இம் மாணவர்கள் அலரிமாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்தனர். இதன்போது அந்த மாணவர்களுடன் கலந்துரையாடி ஜனாதிபதி தமது மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.

விஞ்ஞானம், கணிதம், வணிகம், கலை மற்றும் தொழில்நுட்ப பாடங்களில் நாடளாவிய ரீதியில் முதல், இரண்டு, மூன்றாம் இடங்களைப் பெற்ற 15 மாணவர்களே அலரிமாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.கொழும்பு பாடசாலை மாணவர்கள் போன்றே சமகாலத்தில் கிராம பிரதேச பாடசாலை மாணவர்களும் முக்கியமான வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இது குறித்து நாம் பெருமையடைவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி: தமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பும் அதுவே எனவும் குறிப்பிட்டார். நாட்டை நேசிக்கும் பிரஜைகள் என்ற வகையில் நாட்டிற்காக மேற்கொள்ள வேண்டியதை நிறைவேற்ற வேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்கள் அந்த மாணவர்களை கேட்டுக் கொண்டார். தேசிய சேமிப்பு வங்கி இம்மாணவர் களுக்கு 4 வருடங்களுக்கான கல்விப் புலமைப்பரிசிலை வழங்கியுள்ளது. அப்புலமைப்பரிசிலை ஜனாதிபதி மேற்படி மாணவர்களுக்குக் கையளித்தார்.

அத்துடன் அவர்களுக்கு மடி கணனிகளும் வழங்கப்பட்டன.பல்கலைக்கழகத்துக்கு இம்முறை தெரிவாகும் மாணவர்களின் கல்வி தொடர்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com