குழப்பத்தில் முடிந்த தொல்லிப்பளை உண்ணாவிரதம்! (படங்கள் இணைப்பு)
இலங்கையில் இடம்பெற்ற அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ் மக்களின் வாக்குகள் செல்லாக்காசாகவே புறந்தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இன்று (15.02.2013ல்)நடைபெற்ற உண்ணாவிரத நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியினரும், அவர்களின் சில்லறைகள் சிலவும் பங்குகொண்டுள்ளனர்.
இந்நிகழ்வின்மூலம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதன்மூலம் நிறைவேற்று அதிகார அரசியலமைப்பைக் கொண்ட ஜனாதிபதிக்கான ஆசனத்தில் அமரலாமென ஐ.தே.கட்சியினர் (U.N.P)கனவு காண்கின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏற்கனவே இரு தடவைகள் தோல்வியுற்றதன் காரணமாக போட்டியிட ரணில் விக்கிரமசிங்கா அஞ்சியநிலையில் 30 வருடகாலமாக இராணுவத் தளபதியாக பணியாற்றியவரும், பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளின் அழிவிற்கு பிரதான காரணியாக செயலாற்றியவருமான சரத் பொன்சேகா அவர்களை களமிறக்கியதுடன் அதற்காக பல மில்லியன் ரூபாய்களுக்கு அதிபதிகளாகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினரும் தத்தமது சட்டைப் பைகளை நிரப்பினர்.
எவ்வாறாயினும் அடுத்து நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலுக்கான சன்மானமாக பயங்கரவாதிகள் பெறப்போகும் தொகை பாரிய அளவிலானதாகவே அமையப்போவது மட்டும் நிட்சயமாகும். அதேவேளை வாக்களிக்க இருக்கும் தமிழ் வாக்காளர்கள் ஏமாளிகள் என்பதே வரலாறாகும்.
இந்த நிலையில் வலிகாமம் வடக்கில் மீள்குடியேற அனுமதிக்குமாறு கோரி, தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போரட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா அங்குள்ளவர்கள் மத்தியில் உரையாற்றிவிட்டுத் திரும்பிச் சென்ற சிறிது நேரத்தில் இனந்தெரியாத சிலர் கூட்டத்துக்குள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், அவர்களில் ஒருவரைப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தபோதும் அவரை பொலிசார் தப்பிச்செல்ல விட்டதாக குற்றஞ்சாட்ட முற்பட்ட வேளையிலேயே இந்த குழப்பம் ஏற்பட்டிருந்தது
இந்த நிலைமைகளால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியபோதும், தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சித்தார்த்தன், செ.கஜேந்திரன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment