Tuesday, February 12, 2013

பொதுமக்குளுடைய காணிகளை நாங்கள் எடுக்கவில்லை வந்து பாருங்கள் என அழைத்த யாழ் கட்டளைத்தளபதி ஹத்துறுசிங்க

யாழ்ப்பாணத்தில் தற்போது ஊடகங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை பேசிக்கொண்டு இருப்பது பொதுமக்களுடைய காணிகளை இராணுவம் கையகப்படுத்துகிறது என்பதுதான். இது அரசியல்வாதிகளுடைய பொய்பிரச்சாரம் என்று தெரிவித்த யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துறுசிங்க, பலாலி விமானத்தளம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கப் பணிகளுக்காகவே அந்தப் பகுதியில் காணிகள் பெறப்படுவதாக கூறிப்பிட்டார்.

“30 வருட கால யுத்தத்திற்கு பின் யாழ்.மாவட்டத்தில் தற்போது பல்வேறு வகையில் அபிவிருத்தி கண்டு வருகிறது இவ்வாறு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியி்ன் பயனாக தற்போது யாழ் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை நேரடியாக கப்பல் மற்றும் விமானங்கள் மூலம் ஏற்றுமதி செய்வதற்காக காங்கேசன்துறை துறைமுகம், மற்றும் விமானப்படை தளங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன” இதற்காக இவற்றுக்கு அண்மையில் உள்ள பொதுமக்களுடைய காணிகள் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் சொன்னார்.

இவ்வாறு பெறப்படும் காணிகளுக்குப் பதிலாக, அந்தக் காணிகளின் சொந்தக்காரர்களுக்கு தற்போதைய நடைமுறை விலையில் நட்ட ஈடு வழங்கப்படும் என்றும், அல்லாதுபோனால், வேறு இடங்களில் உள்ள அரசகாணிகள் அவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.


“நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, இராணுவத்தினர் வசமிருந்த தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடம் கையளித்து வருகிறோம். இந்த நடைமுறை தொடரும்.

இராணுவம் என்பது எந்த ஒரு அரசியல் கட்சியினுடைய தேவைக்காகவும் செயல்படுவதில்லை எனவும், இது ஒரு கட்சி சார்ந்த அமைப்பு இல்லை என்றும் குறிப்பிட்ட அவர், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இராணுவம் மக்களையும் நாட்டையும் பாதுகாப்பதற்கான கடைமையில் இருக்கும் என் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com